யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, தமிழ் நவீன இலக்கிய உலகின் முன்னோடிகளின் ஒருவரான க.நா.சு அவர்கள் பெயரில், ‘க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020’ என அறிவிக்கப்படுகிறது.
நோக்கம்
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்த உலகத்தின் எல்லா நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றை ஒவ்வொரு தனிமனிதனும் சந்திக்க வேண்டியிருக்கிறது. கொரோனாவின் நோய் தாக்கத்தை, தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை, வறியவர்களின் இடப்பெயர்வை, எதிர்கால அச்சத்தை, பொருளாதார வீழ்ச்சியை, அரசின் நடவடிக்கைகளை கதைகளின் வழி பதிவு செய்வது.
விதிமுறைகள்
- இந்தச் சிறுகதைப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். (குறுநாவல் போட்டியில் கலந்துகொள்பவர்களும், சிறுகதைப் போட்டியிலும் கலந்து கொள்ளலாம்).
- சிறுகதையின் மையம் கொரோனா பாதிப்பைச் சுற்றிலும் மட்டுமேஇருத்தல் வேண்டும்.
- சிறுகதையானது யதார்த்தம், மாய யதார்த்தம், அறிவியல் புனைவு என எவ்வகையிலான கதையாகவும் இருக்கலாம்.
- ஒரு நபருக்கு ஒரு சிறுகதை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
- ஒரு சிறுகதையின் அளவு அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
- சிறுகதையினை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (WORD.DOC) –ல் அனுப்ப வேண்டும்.
- கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி editor@yaavarum.com
- படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூன் 31 ஆம் தேதி, 2020.
- போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் எனக் கண்டறிவது, அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும்
ஈடுபடக்கூடாது.
உறுதிமொழி
- படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.
- ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும்.
- மேலும் படைப்பானது தனது சொந்த கற்பனையில் உருவானது என்றும் அது, எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிறஉறுதிமொழியும் இணைந்திருக்க வேண்டும்.
தேர்வும் பரிசும்
- இப்போட்டியின் முடிவில் மொத்தம் 10 சிறுகதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு சிறுகதைக்கும்
தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். நடுவர்கள் பத்துக்கும் குறைவான சிறுகதைகளையே பரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் இணைக்கப்படும்.
“புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி -2020” பரிசு வழங்கும் விழாவில், சிறுகதைகளுக்கான ‘க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-
2020’க்கான பரிசும் வழங்கப்படும். - நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
- இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைத் தொகுப்பை யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிடும்.
ஜீன் 31 … சரியா…?
June 30
thanks for this opportunity
this is not a proper format for your submission, pls read the rules
“கதை அளவு அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்”
இதை 2000 வார்த்தைகள் கொண்ட கதைகள் தான்
போட்டியில் எடுத்துக் கொள்ளப்படும் அல்லது அதிகபட்சம் 2000 வார்த்தைகளுக்குள் தான் இருக்க வேண்டும், எப்படி புரிந்து கொள்வது?
அதிகப்பட்சம் 2000 வார்த்தைகள், அதாவது 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
Eppothu mudivai solvirgal?
மூன்று மாதம் வரை ஆகும்… நெடும் பட்டியலுக்கு
3 மாதம் ஆகும்
Kadasi thethi mudinthu vittathu 😕 extend agrathuku ethum chances irukka…..
இல்லை நண்பரே. அடுத்த ஆண்டு வேறொரு தலைப்பில் அறிவிப்பு வெளிவர வாய்ப்புண்டு
போட்டியின் முடிவுகள் வந்து விட்டதா?!
கடைசி நாள் நீட்டிப்பு ஆகஸ்ட் 15 என்ற அறிவிப்பு சரியானதா???
ஆகஸ்ட் 14 க்குள் எங்கள் படைப்புகளை சமர்பிக்க இயலுமா???
15 இரவு வரை
இப்போட்டியின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படுகிறது???