Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்வேல்கண்ணன் கவிதை

வேல்கண்ணன் கவிதை

தொற்றுச் சிதறல்கள்
(மறைக்கப்பட்ட மரணங்களுடன் இரண்டாம் அலை)

சுவாசித்த இறுதி மூச்சில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள்

*
விலகி நின்றாலும் தனித்து இருந்தாலும்
விடுவதாகயில்லை
மரணம்

*
‘மூச்சுப் புடுச்சு உள்நீச்சலடி கண்ணு’ கிணற்றடியில் அப்பா
‘மூச்ச நல்லா இழுய்யா’ சாம்பிராணி புகையிட்ட அம்மா
அடுத்தடுத்து இறந்து போனார்கள்
சுவாசப் பற்றாக்குறையினால்

*
தகனத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கிறது
அதற்கு முன்
அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்
எந்தையும் தாயும்

*
“எவ்வளவு காத்து அடிச்சாலும் வெயர்த்து கொட்டும், காத்தைக் குடிப்பவன்” பிள்ளை பருவம் குறித்து பெயரிடுவார் அம்மா

ஒருபிடி மூச்சுக்கு வக்கற்றவனானேன்.

*
‘மாமனோட மனசு மல்லியப்பூ போல…’
யாருடைய அலைபேசியோ ஒலித்தது.
சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் கண்களில்
சுவாசப் பற்றாக்குறையினால்
இறந்த மாமன் தெரிந்தான்


வேல் கண்ணன்

இசைக்காத இசை குறிப்பு, பாம்புகள் மேயும் கனவு நிலம் தொகுப்புகளின் ஆசிரியர். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். மின்னஞ்சல் முகவரி: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular