1. “நினைத்து விடுகிறது மட்டுமே” என்கிறது
அலங்கோல அறைக்குள் எந்த நிமிடத்திலும்
எந்த இடத்திலிருந்தும் நெளிந்து கடக்கும்
கருநிற பாம்பு வாழ்கிறது.
இங்கே பெரும் வனாந்திரம் வரப்போகிறது என்றும்
தசைகளை அறுத்து எடை போட்டவனின் காலம் எதுவென்றும் கேட்கிறது.
உள்ளாடைகளை களையும் போது பெருமூச்சு.
வலுத்து பெய்யும் மழையில்
காஃபி வித் ராஜா கேட்கிறது.
சட்டென்று காஃகாவின் உருமாற்றம்
கண்ணாடி முன் நின்றேன் இருவருமே தெரிந்தோம்.
புலால் உண்பதில்லை.
கலவிக்கு அழைத்து வந்தவர்களில்
பெண்கள் எழுவதற்குள் கிளம்பி விட்டதாக நம்பினேன்.
“பெண்கள் புலால் வகைமையில் வருவதில்லை, நண்பா”
எனும் வரை..
***
2. பரம ரகசியம்
ரெண்டு நாளிலேயே தாலியறுத்த அத்தை
புழக்கடையில் செத்துக் கிடந்தாள்
அவள் சொன்ன பாம்பு கதைகள்
அத்தனை அழகானவை
அவள் கனவின் அழகிய பாம்புகள்
புழக்கடை வந்திருக்குமோ?
**
ஆசிரியர் தொடர்புக்கு -rvelkannan@gmail.com