யாவரும் டிசம்பர் இதழ் 2020

0

அறிவிப்பு:

புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி 2020,

எண்ணிக்கையில் சற்றும் எதிர்பார்த்திராத அளவு வந்திருந்த குறுநாவல்களில் இருந்து குறும்பட்டியலைத் தயாரிப்பதற்கான நாள் சற்றே தாமதமாகிவிட்டது. நெடும்பட்டியலில் கடைசிச் சுற்றுப்பணிகள் நடந்து வருகின்றன, விரைவில் அல்லது டிசம்பர் இறுதியில் குறுநாவலுக்கான குறும்பட்டியலை எதிர்பார்க்கலாம்.
பொறுமையோடு காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு எங்களது நன்றி..

யாவரும் டிசம்பர் இதழ் :

ஒவ்வொரு இதழும் கடந்த இதழோடு ஒப்பிடுகையில் வித்தியாசமாகவும், தரம் மேம்பட்டதாகவும் இருக்கவே உழைக்கிறோம். அத்தோடு வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு இதழைக் கொண்டு வருகையில் இதழானது ஒரு குறிப்பிட்ட குழுவையும் தாண்டி விரிவடைகிறது.

லா வோட்ஸு பொறுப்பாசிரியராக பங்கெடுத்து கொண்டு வந்திருக்கும் இதழ் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் கட்டுரைகள் என சிறப்புடன் வந்துள்ளது. யாவரும் ஆசிரியர் குழு அவரை வாழ்த்துகிறது. வாசகர்கள், இதழின் குறைகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும். படைப்புகளும் அனுப்பிடலாம்.

விண்ணப்பம் : புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எமது be4books புத்தகக் கடைக்கு ஆதரவு தெரிவிக்க, www.be4books.com இணையம் வாயிலாக நூல்கள் வாங்கி எங்களை உற்சாகப்படுத்துங்கள்

நம்பிக்கை:
எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும் புதுப்பொலிவுடன் யாவரும் இணையதளம் செயல்பட ஆரம்பித்தது, புத்தகக் கடை ஆரம்பித்தது என இந்த ஆண்டு ஓரளவுக்கு நம்பிக்கையை விதைக்கவும் தவறவில்லை என்கிற உணர்வோடு புதிய ஆண்டுக்குள் புதிய இலக்குகளோடு நாம் பயணிப்போம்.

இப்படிக்கு
மாறா அன்புடன்
ஜீவ கரிகாலன்
பதிப்பாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here