வணக்கம்.
யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 குறித்து, 2020 மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது.
180-க்கும் மேற்பட்ட குறுநாவல்களிலிருந்து எமது தேர்வுக்குழு குறும்பட்டியல் தயாரிப்புக்கான வேலையில் இறங்கியது. தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி இருபது எழுத்தாளர்களின் பெயர்கள் அடங்கிய குறும்பட்டியல் கடந்த டிசம்பர் 31, 2020 அன்று யாவரும் பப்ளிஷர்ஸ் இணையதளத்தில் வெளியானது.
இறுதிப்பட்டியல் வெளியிடும் நடுவராக இருக்க எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள் சம்மதித்தார். குறும்பட்டியலில் இருந்து பரிசுக்குத் தேர்வுபெறும் பத்து குறுநாவல்களை சிரத்தையுடனும் அக்கறையோடும் தேர்வுசெய்து கொடுத்தமைக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு யாவரும் பப்ளிஷர்ஸ் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..
பரிசு பெற்றோர் பட்டியல் பின்வருமாறு.
- *மென்முறை – நாராயணி கண்ணகி
*பத்துப் பாத்திரங்கள் – சுரேஷ் பிரதீப்
*நாற்பது நாட்கள் – மலர்வதி
*ஜப்பான் – பாலாஜி பிரசன்னா
*முப்போகம் – மயிலன் ஜி சின்னப்பன்
*தீதிலர் – பி கு
*புயா மின்னா இதி – மணி எம்.கே மணி
*காயாவனம் – வா.மு கோமு
*யாகத்தின் பெருநெருப்பு – அ.மோஹனா
*மைனிகள் – எம்.எம் தீன்
வெற்றிபெற்ற எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் பரிசுப்போட்டி, க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி ஆகிய இரண்டிற்கும் சேர்த்து யாவரும் அமைப்பின் பத்தாவது ஆண்டு சிறப்பு நிகழ்வில் பரிசுகள் வழங்கப்படும். விழாவின்போது சிறுகதைத் தொகுப்பும், குறுநாவல் தொகுப்பும் வெளியிடப்படும். உடன்நின்ற நண்பர்களுக்கும், தேர்வுக்குழுவிற்கும், எம்மை ஆதரிக்கும் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றி.
நன்றி
ஜீவ கரிகாலன்
01/04/2021
பரிசு பெற்றோருக்கும் என் போல் பங்கேற்ற அனைத்து நாவலாசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! பரிசு பெற்ற நாவல்களை வெளியிடும் போது அவசியம் தெரிவிக்கவும்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏🤝👍
பரிசு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதிவாருங்கள். எனது கதை தேர்வாகாவிடினும், என்போன்ற எழுத்தார்களை ஊக்குவிக்கும் “யாவரும்” பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க! வளர்க!
அன்புடன்,
எஸ் கே சண்முகநாதன்.
கோவை.