நிலவிரவு
– துஃபு , தமிழில் செ.ச.செந்தில்நாதன்இன்றிரவு ஃபூஸோவின் மீது நிலவு.
மகளிர் அறையில் தனியாளாய்
அவள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பிரிந்து நான் சென்ற சாங்ஆனை அவள் நினைப்பதேனென
பாவம், எங்கோ உள்ள என் குழந்தைகளுக்கு புரியாது.

நறுமண மூடுபனியில்
அவள் மேகக்கூந்தல் நனைகிறது.
தெளிவான நிலவொளியில்
அவள் பளிங்குக் கரங்கள் நடுங்குகின்றன.
யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும்
நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம்,
மினுக்கும் கண்ணீர்த் தாரைகளை
நிலவொளியில் துடைத்தெறிந்து?
– துஃபு
(சீன மகாகவி து ஃபு வாழ்ந்த காலத்தின் மிகப்பெரிய நிகழ்வு ஆன லூஷான் கலகம். மாமன்னர் ஷுவான்ஸோங்க்கு எதிராக கிபி 755 இல் வெடித்த இந்தக் கலகத்தி்ன்போது சிறைபட்டார் து ஃபு. அப்போது அவர் தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்திருந்தார். அந்த தருணத்தில் எழுதிய கவிதை இது.
)
)
நிழற்படம் : இணையம் – allpoetry