ந.பெரியசாமி கவிதைகள்

0

1

குளிர் கட்டியை
நீரில் கலக்க
சில்லிடலில் உடல் மகிழ்ந்தது.

புணர்ச்சிக்கு பின்னான
குதுகுலத்தை தந்ததாக
கூறினான் நண்பன்
குளிர்கட்டி தளும்பிய
மது அருந்திய அனுபவத்தை

அவ்வளவு ஏக்கமாகிப் போனதெனக்கு.

எப்பொழுதும்
தயராகவே இருக்கின்றன
குளிர் கட்டிகள்

இது குறித்தெல்லாம்
எவ்வித புரிதலுமற்று
தன் விளையாட்டில் இருந்தாள்
பனிக்கட்டியை வரைந்த சிறுமி


*

2

காற்றுக்கு
எல்லாமும் தெரியும்
பேசத் தெரியாது
தன் ஓசையால்
எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாத
சமிக்ஞைகளைக் காட்டும்

பிரியத்துக்குரியவளின்
முகவரியை தொலைத்தவன்
காற்றிடம் மன்றாடிய
கதையை இதுவரை
கேட்டதில்லை

இனி
நான் கதையாவேன்

***

நா. பெரியசாமி, வசிப்பது ஓசூரில். தோட்டாக்கள் பாயும் வெளி, மதுவாகினி, மொழியின் நிழல், குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here