சுவடுகளை அழிக்கும் பயணம்

0

வாகீசன்

நொறுங்கிய
கண்ணாடித் துகளின்
பொடிகளை
உந்தித் தள்ளுகின்றது
மோகபேரன்பின் பெருந்திணை கண்ணீர்

பெஞ்சமின் பட்டனின் பயணச்சீட்டு
அண்டார்டிகாவில்
எதிரொளிக்கும் துகளிடையே
இருத்தி திருப்புகின்றது
நேரத்தில் பின்னோக்கி

அண்டத்துள் அண்டத்தை தேடி
மெக்காண்ட்லஸ்ஸின் அடியொற்றிய பயணத்தில்
ஆசிகளும் சாபங்களும்
நீர்த்து நிறமற்று மறைகின்றன

மறந்த
மறுத்த
வெறுத்த
துரத்திய
வஞ்சித்த
உயிர்களின் மீதான
கடைசி சிலிர்ப்பின்
நிழல் மிஞ்சியிருக்கின்றது
எஞ்சியிருக்கும் பயணத்தில்
அழிந்தபடி

***

வாகீசன், திரைத்துறையில் பணியாற்றும் இவர். இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். கவிதைகள் எழுதிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here