கண்டராதித்தன் கவிதை

2

***

இருந்த சுப்புவும் இறந்த சுப்புவும்

நண்பர் சுப்பு சில குறைகளுடன்
இருந்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு
இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்

நாட்பட நாட்பட
நண்பர் சுப்பு தன்னிடம் சில குறைகள்
இருந்ததை அறிந்திருந்தார் என்பதும்
குற்றச்சாட்டானது

சரிதான் அதுவும்
இருக்கலாம் அல்லது
இல்லாமலும் இருக்கலாம்

சுப்புவின் இறந்த தினத்திற்குப் பிறகு
நண்பர் சுப்பு சில குறைகளுடன்
இறந்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டாகிறது
இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்

நாட்பட நாட்பட
சுப்பு இறந்திருக்கிறார்
என்பதே குற்றச்சாட்டாகிறது

சுப்பு இறந்துபோன நாட்களில் நாங்கள்
இறந்த சுப்புவின் அன்பிற்காக அழுதோம்
இறந்த சுப்புவிற்காக அஞ்சலி செலுத்தினோம்
அவர் இருப்பதுபோலவே நினைவுகூர்ந்தோம்

இருக்கலாம் இருக்கலாம்.

***

கண்டராதித்தன்

2 COMMENTS

  1. கண்டர் கவிதை
    இருக்கிறது
    அது நன்றாகவும்
    இருக்கிறது

  2. மிக எளிமையான சொற்கள். எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையில் திமிலங்களும் ராட்சத கப்பல்களையும் ஓடைக்கென்றே இருக்கும் சிறிய ரக உயிரிகளையும் சத்தமில்லாமல் கரை தாழப் படிக்கும் மிக எளிமையான சொற்களில் கண்டராதித்தன் இதுதான் வாழ்க்கை என்று தனக்குள் முணுமுணுத்துப் போவது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here