Tag Archives: செ.ச.செந்தில்நாதன்

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 3 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

வசந்த பெளர்ணமி
                 -துஃபு   (தமிழில் : செ.ச.செந்தில்நாதன்)

 
பாழ்பட்டிருக்கிறது நாடு
மாறமறுக்கின்றன மலைகள் ஆறுகள்
நகரத்தில் வசந்தம்; புல் புதல்கள் செறிவாய் படர்கின்றன
காலம் துயர்தர, பூக்கள் கண்ணீர் சிதற்றுகின்றன
பிரிதல் வெறுத்த பறவைகள்; படபடக்கிறது என் நெஞ்சம்
தீக்குண்டங்கள் மூன்று திங்கள்களைக் கண்டும் தொடர்கின்றன
வீட்டிலிருந்தோர் கடிதம், அது பதினாயிரம் பொன் பெறும்
நரையோடிய தலை, மயிர் உகுத்துக்கொண்டிருக்கிறது
மெலிந்து போனது அக்குடுமி, கட்டிச்செருகமுடியாமல்

 – துஃபு

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 2 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

நிலவிரவு – துஃபு   ,   தமிழில்  செ.ச.செந்தில்நாதன்இன்றிரவு ஃபூஸோவின் மீது நிலவு. மகளிர் அறையில் தனியாளாய் அவள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பிரிந்து நான் சென்ற சாங்ஆனை அவள் நினைப்பதேனென பாவம், எங்கோ உள்ள என் குழந்தைகளுக்கு புரியாது. நறுமண மூடுபனியில் அவள் மேகக்கூந்தல் நனைகிறது. தெளிவான நிலவொளியில் அவள் பளிங்குக் கரங்கள் … read more

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 01

  தன்னந்தனியனாய் -துஃபு       தமிழில் -செ.ச.செந்தில்நாதன் விண் முகட்டில் ஒரு வல்லூறு, ஆற்றின் கரைகளுக்கிடையில் சிறகடிக்கின்றன ஒரு ஜோடி நாரைகள். பாய்ந்து கொத்திச்செல்வது எளிது, அவை முன்பின்னோடுகையில். புல் மீது பனித்துளிப் படர்ச்சி. விரிந்திருக்கிறது சிலந்தி வலை, இறுக்கிமூட அணியமாக. இயற்கையின் நிகழ்பாடுகள், மனிதர்களின் செயல்பாடுகளை அண்மிக்கின்றன. தன்னந்தனியனாக நிற்கிறேன், பதினாயிரம் கவலைகளுடன். … read more