Tag Archives: அகரமுதல்வன்

நெடுநிலத்துள் – அகரமுதல்வன்

நெடுநிலத்துள் - ஓவியம் : வல்லபாய்

ஓவியம் : வல்லபாய்

வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும் பீடித்தவர்கள் உட்பட பக்தர்களும் வந்துசேர பூமியில் இருள் பூக்கத்தொடங்கியிருக்கும். குடிசையின் வலதுபக்கத்தில் நிற்கும் மிக உயரமான பனையிலிருந்து கூட்டமாய் கிளிகள் சத்தமிட்டு பறக்கும். சாதுவான காற்றிலும் காவோலைகள் உரசி அந்தப் பொழுதின் மகத்துவத்தை ஒரிசையாய் உய்விக்கும். அம்மம்மா குடிசையினுள்ளே இருக்கும் சாமிகளுக்கு பூசை முடித்துவிட்டு, கற்பூரம் எரிந்தபடியிருக்கும்    திருநீற்று தட்டோடு குழுமியிருக்கும் சனங்களுக்கு முன்னால் வந்துநிற்கையில், “அம்மாளாச்சி” என்று உருகியழுது கும்பிடுவார்கள்.

அம்மம்மாவை நானும் இந்தப் பொழுதுகளில் மூக்குத்தி அம்மன் என்று தான் அழைப்பேன். அவளின் மினுங்கும் மூக்குத்தியின் ஒளியே கடவுளை மறுப்பதற்கு ஒரு போதும் இடமளியாது. நெற்றியின் திருநீற்றுப் பூச்சு வசீகரமான புலரியை பெருங்கனிவாய் எல்லோருக்கும் நினைவுபடுத்தும். கையை நீட்டித்  “தா” என்று கேட்டதும் ஒடித்துவைத்திருந்த வேப்பிலைக்கட்டை உடனேயே எடுத்துக் கொடுப்பாள் ஒருத்தி. விரிக்கப்பட்ட ஓலைப்பாயில் அம்மன் சப்பாணி கட்டியிருந்ததும் ஒவ்வொருவராக அவளிடம் நீறுபோட்டுச் செல்வர்.அம்மாளாச்சி.. அம்மாளாச்சி என்று மனதுக்குள் உச்சரித்தபடியேயிருக்கும் சிலரோ அம்மனிடமிருந்து  ஆறுதலான வார்த்தைகளைக் கேட்பதற்காக தமது மனக்குழப்பங்களை கூறுவார்கள். காய்ச்சல் வந்த குழந்தைகளை அம்மனின் வேப்பிலையால் அடித்து தண்ணீர் தெளித்து நலம்பெற முண்டியடிப்பார்கள். read more

நேர்காணல் – கடங்கநேரியான்

நீங்கள் தமிழ் தேசியவாதியா? பொருளாதாரமயமாக்கல் தனித்த தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து தனக்கான சந்தையை நிர்மாணிக்கும் திட்டத்தோடு ஒற்றை உலகை நிர்மாணிக்க முயற்சிக்கிறது. அதன் பொருட்டு பூர்வகுடிகளின் மீது பண்பாட்டு ரீதிரியாகவும் பொருளாதார ரீதியாகவும் போர் தொடுக்கின்றன. உதாரணமாக ஜல்லிக்கட்டு மீதான தடை , கள் இறக்குவதற்கு தடை விதித்திருக்கும் அரசு தான் டாஸ்மாக் நடத்துகிறது. … read more

சு.அகரமுதல்வன் கவிதைகள் – 3

. திட்டமிட்ட சொற்களால் கீறிச்சுவைக்கும் அநாதரவற்ற கவிதையின் குருதிகள் உன் கால் தடங்களில் வழிந்தோடக்கூடும் அநாதரவற்ற ஆன்மாக்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் துளிக் காலம் யுகக்கணக்கானது. நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை என் விரல்கள் தீண்டிய முதல் ஸ்பரிசம் உன் நெற்றிப்பிறை அந்தரங்கத்தின் ஆன்மா முதற் காதலை உன்னிடம் பாட நினைக்க செவிப்புலனற்ற இருட்டுப் பூனையொன்றாய் என்னை … read more