Monthly Archives: September 2012

கால விஷம் – கிரிஷாந்

இதயம் கனத்த மழை
வழிவது காலத்தின் சீழ்.
இருள் படிந்த மலைகளில் நெளிகின்றன
விஷம் கக்கும் மேகங்கள் .
காலின் கீழே சரளைக் கற்கள்
ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஏதேதோ .
மோனங்கள் விழித்தன
பெரும்பகலை விழுங்கியது காலம் .

ராத்திரி நீண்ட பயணம்
கால்களில் இரத்தம் வழிய வழிய
நடக்க வேண்டும்
வெளிறித் துடிக்கும் இதயத்தைக் கையில்ப்
பிடித்தபடி .
மரணம் நின்று கொண்டிருக்கிறது
வரும் வழியில் இரண்டு பறவைகள்
சொல்லிச் சென்றன .
அச்சமற்ற நிழலில் தொங்கிக்கொண்டிருந்தது
வலிமையற்ற எனதாசைகள் .
நெருங்கி விட்டேன்
கண்களில் மரணம்
கைகளில் நகங்களில் மயிரில்….
இதயம் கருகிகிறது ….வாசனை வருகிறது
யாருமில்லை ..யாருமே
பெரும் இருள்  சிதிலமடைந்தன  கேள்விகள் .

மீண்டும் விழித்தது காலம்
கவ்வியதை விட்டபடி சிறகுதைத்து மீள்கிறது
வெளிக்கே .

 

கிரிஷாந்

 

 

 

 

சர்ப்பங்களிலான உலகம்

  நெருங்கி வருகிற விழிகளிலிருந்து சர்ப்பங்கள் வெளியிறங்குவது அறிந்ததே நகர்தல் மறுதலிக்கிறோம் விஷம் பூத்த செந்நிற மௌனம் நிரம்ப துயர் இசைப் பாடல் ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து துரோகத்தையும் குரூரத்தையும் குறிப்புகள் சேகரித்து சேகரித்து மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள் யாவருக்குமான ஆமென்களோடு கரைந்து தீரட்டும் தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த ஸ்வாதீனத்தில் அல்லாத நமது வக்கற்ற நேசமும் … read more