நாக்குட்டி – 4

நாக்குட்டி – 4

ந்தப் புள்ளியில் காதலைச் சொல்ல வேண்டுமென்றுத் தோன்றியது என்று சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. எல்லாம் அந்த ஹெட்போனுக்குப் பிறகுதான் என்பது மட்டும் தெளிவு. மனதின் இன்னொரு பரிமாணத்திலிருந்துச் சொல்வதானால், அவள் நட்புடன் தான் பழகுகிறாள் என்று என்னை எண்ண வைத்ததும் அந்த ஹெட்போன் தான். மறுநாள் முகத்தைக் காட்டுவாள் என்று மதிய உணவின்போது நினைத்துக் கொண்டுப் போனால், மிகச் சாதாரணமாக சிரித்தாள். கெஞ்சவிடவோ, தாங்கவோ அவள் விடவில்லை. எனக்கு அதுவேறு கூடுதல் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தது. அவள் என்னிடம் பேசத் தொடங்கியது முதலே இவளுக்குத் தோழி என்று ஏன் யாருமே ஒட்டிக்கொண்டு வரவில்லை என்ற குழப்பம் வேறு அப்போது தோன்றியது. கோபப் படமாட்டாளா? இப்படித்தான் கேஷுவலா இருப்பாளா என்று அவளிடம் கேட்டுவிடும் அளவிற்கு அவள் என்னைப் பழக்கப் படுத்தவில்லை. பழகுதலின் மூலம் பழக்குதல் தானா காதல்?.

அடிப்படையாவே பசங்க, நீங்க எல்லாம் ரொம்ப பயப்படுறவங்கடா. அதுனால தான் ஒரு பொண்ணோட movement என்னனு யூகிச்சாலும் உங்களால சொல்ல முடியாது. You know! இது தான் காதலோட முதல் சாபம். lets play.”

நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். ஒருவேளை அவள், முகம் சுண்டும்படி ஏதும் சொல்லிவிட்டாலும், மதிய ஷிப்ட் என்பதால் அடிக்கடிப் பார்க்க நேரிடாது. கொஞ்சநாள் அவள் முன் குற்றவுணர்ச்சியோடு நிற்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற எண்ணம் வேறு என்னைச் சொல்லச் சொல்லித் தூண்டிக் கொண்டிருந்தது. தைரியமாகச் சொல்லிவிடுவதைவிட முக்கியம், சொல்லிவிட்டு அவளை எதிர் கொள்வதுதான் என்ற பயம். வேண்டாம் என்றுச் சொல்லிவிட்டால் “சரி” என்று ஏற்றுக் கொண்டு செல்லும் பக்குவம் இல்லாததாலா இந்த பயம் என்னை ஆட்கொள்கிறது என்றும் யோசிக்கத் தொடங்கியிருந்தேன். தனக்குச் சாதகமான பதில் இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணமே பயத்தை உண்டு பண்ணிச் சொல்லாமல் தடுக்கிறதா என்று யோசனை, “பூவா தலையா” போட்டுப் பார்க்கலாமா என்பது வரை கொண்டு விட்டிருந்தது.

அவளோடு பேசிக் கொண்டிருப்பது மாதிரிதான் தோன்றும், அறையிலிருந்து அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டேன், காபி குடிக்க வரியா? தூங்கிட்டியா? இப்படி என் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிட்டது போன்றே நினைக்கத் தொடங்கிய நாளில் இருந்து தான் காதலிக்கிறேன் என்று நம்பத் தொடங்கினேன். நடந்து செல்லும்போது, லிப்டில் இருக்கும்போது, cab-ல் செல்லும் போது அவளுக்கு மெசேஜில் சொல்லிவிட்டு இருப்பதாய் ஒரு பிரம்மை. எனக்கு அதுவேறு பிடித்துத் தொலைத்திருந்தது. என் எதிரில் தான் இருப்பாள். தைரியமும் பயமும் ஒருசேர வேலை செய்யும். ஐ லவ் யூ என்று சொல்லலாமா, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு என்று சொல்லலாமா என்ற யோசனையின் ஊடே “மன்னிப்பு” கேட்பதற்கும் “sorry” என்று சொல்வதற்குமான மதிப்பீடுகள் ஞாபகத்தில் வரத் தொடங்கியிருந்தன.

துளசியின் கண்கள் நீரோட்டம் நிறைந்தது. அவள் கண்களை எதிர் கொள்ளும்போது ஒரு குளிர்ச்சித் தொற்றிக் கொள்ளும். பசுமையாய், பார்வையை வேறெங்கும் திருப்பாமல் பேச நிறுத்தியது போலிருக்கும். எல்லாம் என் நினைப்பு தான். எனக்கு மட்டும் தானா? மணியைப் பார்த்தேன். DSR (daily status report) போட்டுக் கொண்டிருப்பாள். இன்று மட்டும் என்னோடு ஆறு மாடியும் படிக்கட்டில் இறங்கி வா என்று அழைத்து  படிக்கட்டில் வைத்துச் சொல்லிவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, படிக்கட்டுகளும், குளிர்கால இருட்டும், தனிமையும் காட்சியாய் விரைந்து கொண்டிருந்தது. ஆனால் டயல் செய்ய காண்டக்ட் கூட போக வில்லை. வாட்சப்பில் டைப் செய்து அழிக்கவும் இல்லை. அதையும் மனமே செய்து கொண்டிருந்தது. அவளின் அலைபேசி எண் நினைவில் இருக்கிறதா என்று என்னையறியாமல் எழ, சொல்லிப் பார்க்க  முயற்ச்சிக்கிறேன்  நினைவில் இல்லை.

மூளை எதையோ யோசித்துச் சொல்லிக் கொண்டிருந்தது. அதன் வேகம் கட்டுப்படுத்தும் தன்மையில் இல்லை. “Minutes of meeting” பாயிண்ட்ஸ் குறித்து வைக்கும் ஸ்க்ரிப்ளிங் பேடில் ஒரு பேப்பரைக் கிழித்து வைத்துக் கொண்டேன். அது கோடு போட்ட நோட்டு. வரையறையற்று அலையும் மனநிலைக்கு, கோடு போட்டத்தாள் என்பது முதல் தடையாக இருந்தது. சட்டென்று எழுத முடியவில்லை. என் கையெழுத்து மட்டுமே விதம் விதமாய் போட்டுப்பழகிய எனக்கு, கூடுதலாய் என்ன எழுத?. பணத்திற்கான உள்ளங்கை அரிப்பு என்பது போல, என் மூளை என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தது. இருக்கையின் உயரத்தை ஏற்றுவதும், இறக்குவதுமாய் நிலையின்றி இருந்தேன்; இருந்தது. மனது நமக்குச் சொந்தமான பொருளில்லையோ என்றும் நினைத்துக் கொண்டேன். இத்தனையும் அவள் வெளியேறி இருப்பாள் என்று மணி பார்த்த 5 நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.

 “பயப்பட பயப்படத்தான் காதல் இன்னும் தீவிரம் ஆகும். நிறைய visuals mind-­load  ஆகும். சீக்கிரம் சொல்லிடாதடா பாவி…

ஒருவேளை அவள் நிராகரித்துவிட்டால் சகஜமாகச் சிரித்துப்பேச எவ்வளவு நாள் பிடிக்கும் என்று மீண்டும் தோன்றியது. கூடவே, அவள் உதாசினப்படுத்தினால் தாங்கும் திறன் எனக்கிருக்கிறதா என்ற யோசனையும் வலுப் பெற்றிருந்தது. காதலைச் சொல்லாமலே இருந்தாள் பேசிக் கொண்டாவது இருப்பாள் என்றும் தோன்றியது. அவ்வளவு பலகீனமானவனா நான்? முந்தைய நிறுவனத்தில், என்னைக் கடக்கும் பெண் ஒரு சம்பிரதாயப் புன்னகை வீசிச் சென்று, மறுநாள் அதே போல் பார்க்க நேர்ந்து அவள் சிரிக்கவில்லை எனில் எனக்குச் சிரிப்பு வராது. என்னால் சட்டென சிரித்துவிடவும் முடியாது?. இந்த யோசனை ஓடிக் கொண்டிருக்கும் போதே பொறி தட்டியது. துளசியிடம் நானாக வலிய பேசவில்லை. அவள் தான் பேசுகிறாள். அவள் பேசாமல் இருந்தால், நானும் பேசப்போவதில்லை. “முடியலனன்னு தான லவ்வ சொல்லலாமானு பொலம்பிட்டு இருக்க?” எங்கிருந்தோ என்னை வந்தடைந்திருந்தது.

என் முகம் சீரியசாகத் தெரிகிறதா என்று ஒரு முறை மானிட்டரை ஆஃப் செய்து முகத்தைப் பார்த்துக் கொண்டேன். மிகவும் சலிப்புற்றிருந்தேன். சொல்லாமல் இருப்பதன் செளகர்யம் பற்றி எண்ணத் தொடங்கியிருந்தேன். அப்படியே எந்தன் நடவடிக்கைகள் காட்டிக் கொடுத்தாலும் அது அவள் பாடு. பேசாமல் சென்றால் செல்லட்டும். மணி இரவு எட்டரை ஆகியிருந்தது. நான் மணி பார்க்கும்போதா எட்டரை என்று காட்ட வேண்டும்? “மெஸ்-க்கு சாப்பிட வந்திருப்பா” நான் மிகுந்த ஆத்திரம்  அடைந்திருந்தேன். என்னைத் தவிர எல்லோரும் வேலை பார்க்கிறார்கள். ஒருமுறை எழுந்து அமர்ந்தேன். மீண்டும் எழுந்து கழிவறை சென்றேன் யூரிணலில் நிற்கையில்      வேறொரு நாளில் அவள் சொன்னது நியாபகத்திற்கு வந்தது. “இந்த பசங்க ஏன் சினிமா தியேட்டர்லையும் சரி, food court-லையும் தட்தேந்திகிட்டே இருக்றாங்க இவளுகளுக்கு?” சீராகப் போய்க் கொண்டிருந்ததைச் சட்டென்று நிறுத்திக் கொண்டது போலிருந்தது. வாசலருகே சென்று பஞ்ச் பண்ணலாமா என்று யோசித்தப்படி, மீண்டும் உள்ளே சென்று வெஸ்டர்ன் டாய்லெட்டை மூடிவிட்டு அதன் மேல் அமர்ந்திருந்தேன். இத்தனை நிம்மதியற்றதா இந்த வாழ்வு என்று தோன்றியது. “இதுக்கே இப்படி ஒரு முடிவா”? துளசியிடம் பேச முடியவில்லை என்ற இயலாமை அல்லது பயம் வேலையின் மீது திரும்பியது. இரண்டு மணி நேரம் பெர்மிசன் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்ப முடியலை. என் வேலையின் மீது வெறுப்புணர்ச்சி மேலோங்கியிருந்தது.

எதற்காக, யாருக்காக இப்படி நிர்பந்திக்கப் பட்டிருக்கிறேன்? அறைக்குச் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று வேலை பார்த்தவன் தானே நீ? இந்த வெறுமை எதன் நிமித்தம் ஒட்டிக் கொண்டது? –துளசி –காதல்; நான் என்கிற சுயநலம் மேலோங்கியிருந்தது. இது என் வலி. இதற்கான மாற்று அல்லது தீர்வு காதல் அல்லது துளசி.  என் பலகீனத்தின் வழியே துளசியிடம் பேசாமல் இருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். பலகீனம் உண்டு பண்ணிய ஈகோ, ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை, கூடவே அவள் வேண்டுமென்றத்’ தூண்டுதலும் ஒருசேர தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்தது. “U there” என்று என்னை மெசேஜ் அனுப்ப விடாமல் எது தடுத்துக் கொண்டிருக்கிறது? அனுமதிப்பதா காதல்?

காதல் முதன் முதலில் தூக்கமின்மைக்கான சுயமைதுனத்தை நிகழ்த்தியது. இப்போது விரக்தியின் வீரியத்தைக் கட்டுப்படுத்த அழைக்கிறது. இதற்குப் பின் தான் காதலி போல. ஹேங்கரில் கழட்டிப் போட்டிருந்த பேண்டை மாட்டிக் கொண்டு இருக்கைக்கு வந்தேன். இருபது நிமிடம் இருக்கையில் இல்லை. யாருடனாவது பேசிக் கொண்டிருக்க விரும்பினேன். யாராவது வந்து பேசினால் கத்திவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. சிரிப்பு என்னை பயம் காட்டியது. ஸ்க்ரிப்ளிங் பேடோடு அங்குமிங்கும் நடப்பவர்களைப் பார்க்கப் பார்க்க நிதானமிழந்து கொண்டிருந்தேன். “நாசமா போனவகிட்ட சொல்லிட்டு நிம்மதியாகவாது இருக்கலாம்.” தொண்டை வலி எடுத்தது. மீண்டும் மீண்டும் எச்சில் விழுங்கிக் கொண்டே இருந்தேன். வாய் ஊறச் செய்தேன். ஏறி இறங்கும் எலும்பைக் கீழ் நோக்கி அழுத்திக் கொண்டிருந்தேன்.

இத உன்கிட்ட நான் நேரடியா தான் சொல்லணும், ஆனா! இப்பவே சொன்னா மிரண்டு போயிடுவ… இந்த குழுவா வாழுகிற இனங்கள் பார்த்திருக்கியா நீ? பறவைக் கூட்டம், விலங்குக் கூட்டம், மனிதக் கூட்டம். இந்த ஆண் வர்க்கம் எல்லாமே பயந்து போய் தான், தனக்கான துணையைத் தேடி வச்சிக்கிது. இந்தத் “துணை” இது நாங்க உங்கள நம்பி வரதுனால வர்ற வார்த்தை இல்லை. பயத்திலிருந்து காதல் தொடங்கி அந்த பயத்தின் மூலமா ஓரு dependency உருவாகி பெண் இனம் இல்லனா ஆண் இனத்தால வாழவே முடியாதுன்னு ஒரு stage வரும். இந்த பயத்துனால நீங்க பண்ணுற atrocity இருக்கே  Oh God! உங்களோட ego விட்டுக் கொடுக்கிறது இல்லை. தோல் சுருங்கும்போது உங்களுக்கு முன்னாடி பொண்டாட்டி போயிட்டானா வருமே ஒரு open statement! என்ன தவிக்கவிட்டுட்டு போயிட்டாளே அப்படின்னு. இப்போ தான் நீங்க உங்களோட, காதலிச்ச தொடக்க காலத்தை நோக்கி திரும்பி, எப்படி தன்னைத்  தாங்கினானு நினைச்சி உருகி, ஒண்ணுமில்லாம போய்… One more thing! இந்த ஆண் இனம் கூட உருவத்துல மட்டும் தானே தவிர மனசளவுல ஆணும், பெண் தான்னு எனக்குத் தோன ஆரம்பிச்சிருக்கு நகுலன். காதலிக்கும் போது ஒரு பெண் என்னவெல்லாம் எதிர்பார்ப்பானு யோசிப்பானு யோசிக்கிறிங்க. அதேபோல நாங்க எங்களோட ஆண் தன்மைல இருந்து விறைப்பா நிற்போம். நீங்க எங்களுக்கு சேவை செய்விங்க. அதாண்டா தாங்கு தாங்குனு தாங்குறது. அப்புறம் பொண்ணு கை மீறாதுன்னு தோணும்போது, உங்க பெண் தன்மை கொஞ்சம் கொஞ்சமா காணாம போய் மூளைல இருக்கக் கூடிய memories of images தொலைச்சி, உங்க ஆம்பள ego வெளிய எட்டிப்பாக்கும், அப்படியே தான் எங்களுக்கும். முன்னாடி மாதிரி இல்ல. லவ் குறைஞ்சி போச்சி அப்டின்னு நீளும்.. Do you know the freedom of possessiveness? போடா எழுதுற mood இல்ல. 

While we are in love we forgot those images that are stored in our mind. Then the images transform as visuals leading to fight between the Lovers. Crazy “           

 
– (தொடரும்)
ரமேஷ் ரக்சன்
talk2rr@yahoo.com

நாக்குட்டி – 3

நாக்குட்டி – 3

துளசியிடம் பேசிச் செல்வது எனது தினசரிகளில் ஒன்றானதை உணர்ந்த நாளில், மிகவும் பதற்றமாய் இருந்தேன். தனிமைக்கு இரண்டு பக்கம் இருப்பதை அன்றிரவு தான் உணர்தேன். அவள் எனக்கு ஹெட் போன் ஆர்டர் செய்து வாங்கிக் கொடுத்திருந்தாள். வெறுமனே நன்றி என்று சொன்னால் நெருங்குவதாக நினைப்பாளோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. எனக்கோ, துளசி தான் என்னிடம் நெருங்கி வருகிறாளோ என்றும் தோன்றியது. ஆனால் அலுவலகம் தாண்டி வேறெப்போதும் பேசிக் கொள்ளவில்லை. எனக்கு அதுவேறு குழப்பமாக இருந்தது. ஒருமாதிரி பிசைவது போலவும், உற்சாகமாக இருப்பது போலவும் தோன்றிற்று. எதுவுமே பிடிபடவில்லை. அவள் கொடுத்த ம்யூசிக்  போல்டரின் ஒவ்வொரு ஆல்பத்திற்கும் இருந்த பெயர்களை கூகுள் செய்து அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா என்று தோன்றியது. துளசி பேசி நான் தெரிந்து கொள்வது தான் சரியாக இருக்கும் என்றும் தோன்றியது. தெரிந்தோ தெரியாமலோ அந்த இரவு என்னையறியாமல் என்னை ஆக்கிரமித்தது போல் தான் இருந்தது. ஆனால் அது ஒரு சுதந்திரம் என்றும் நினைத்துக் கொண்டேன்.

அடிக்கடி ரூம் கதவைத் திறந்து பால்கனியில் நின்று கொண்டேன். என் தற்காப்பு மனது வேறொரு வகையில் உடலை வியர்க்கவும் வைத்திருந்தது. நான் அவளை ஒருமையில் அழைத்ததை நினைத்துக் கொண்டேன். பேச்சு வாக்கில் எப்போதாவது தான் அதையும் சொல்லி முடிக்கும்போது கண்களால் ஒரு வெட்டு வெட்டுவாள். இனிமேல் சொல்லக்கூடாது என்று யோசிக்கும் அளவிற்குப் பார்ப்பாள். இனிமேல் வா போ என்று சொல்லக்கூடாது என்று நினைக்கும் போது சில நேரங்களில் பருவம் எட்டிய அன்றைய நாளை எண்ணிக் கொள்வேன். அதையும் சொல்ல வாய் எடுத்து எப்படியோ தப்பித்திருக்கிறேன். அவள் பேச வைத்து லாவகமாய் வாயைப் பிடுங்குவாள். இத்தனைக்கும் அவள் பேசாத மாதிரி தான் இருக்கும். இருந்தும் எதற்குச் சொல்கிறோம் என்று யோசிக்கத் தோன்றியதே இல்லை. முகத்தைப் பார்த்தவுடன் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும்.

“உனக்கு சந்தேகப்படக் கூட தெரியலடா இடியட்” 

ஒரு மாதிரி மூளை செயல் படாதது போலவும், இரத்தம் உறைந்து பின் பீறிடுவது போலவும் அப்படி ஒரு குளிர்ச்சி அப்படியொரு சூடு. அந்தக் குளிருக்கு வாயில் புகை வருகிறதா என்றும் ஒரு முறை ஊதிப் பார்த்துக் கொண்டேன். சம்பள உயர்வு வாய்ப்பில்லை என்றதும், டிசம்பரில் கம்பெனி மாறியது எவ்வளவு நல்லது. ஒன்று அவளை வெய்யில் காலத்தில் பார்த்திருப்பேன். இல்லையென்றால் வேறு எவனோ அந்த வேலையை கொத்திக் கொண்டு போயிருப்பான். வெறிச்சோடிக்கிடக்கும் சாலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் ஊர் பனங்காடு போல ஒட்டி ஒட்டி வளர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடங்கள் எல்லாம் மஞ்சள் விளக்கில் மின்னிக் கொண்டிருக்கிறது. நடமாட்டம் இல்லையெனில் கட்டிடங்கள் சூழ்ந்த வனாந்தாந்திரம்; ஒரு ட்ராக் கூட முழுமையாக கேட்க முடியவில்லை. மாற்றிக் கொண்டே இருந்தேன். கூடவே நாளைக்கு கேள்வி கேட்பாள் என்ற எண்ணம் வேறு.

அவள் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு. ஈர்க்கும்படி இன்னும் எதுவும் நடந்துவிடவில்லை என்றும் நினைத்துக் கொள்கிறேன். ஈர்ப்பு செயலிலா இருக்கிறது? தினமும் பேசுகிறோம். பேசும் சூழலை திட்டமிட்டு உருவாக்குவது போலத்தான் தெரிகிறது. இதற்குமுன் தினமும் எந்த நேரத்திற்கு சாப்பிட வந்திருப்பாள்? தனியாகத்தான் வந்திருப்பாள். இல்லையெனில் இப்போது நான் மட்டும் எதற்கு? எப்படி? எல்லாம் அவள் வாங்கிக் கொடுத்த ஹெட்போன் படுத்தும்பாடு. இரவு கண்மூடி படுத்திருந்தது தெரியும் எல்லா அசைவுகளும் சப்தங்களும் துண்டிப்பின்றி இரவினூடே தான் வந்துகொண்டிருந்தது. தினமும் ஆறரைக்கு எழுந்து அலுவலகம் கிளம்பியப் பழக்கம்; மதிய ஷிப்டிற்கு மா(ற்)றியது இன்னும் மூளையில் பதிவாகவில்லை. அத்தனை ஜனங்கள் சாலையில் வாகனங்களாய் கொண்டிருந்தாலும், எனக்கென்னாவோ வெறிச்சோடிக் கிடப்பது போலத் தான் தோன்றியது. இன்னும் நேரமிருக்கிறது. ஹெட்போன் இல்லாமல், அலைபேசியில் ஓடவிட்டுப்பார்த்தேன். இரைச்சலும் இசையும், முகம் சுழிக்க வைத்தன. குறைந்த அளவு சத்தம் வைத்துவிட்டு, அப்படியே தூங்கிவிடலாம் என்று படுத்திருந்தேன். இசையை குறைந்த அளவு ஒலியில் தான் கேட்க வேண்டுமென்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஹெட்போன்கள் பற்றிப் பேசினாள். இசை பிரிவது பற்றிப் பேசினாள். “Frequency response” என்றாள். மிருகங்கள் உணரும் தன்மை பற்றிப் பேசினாள். அவள் சொன்னது எல்லாம் ஞாபகத்தில் நீண்டு கொண்டே போனது.

அவளை கவனிக்கத் தொடங்கியிருந்தேன். வெள்ளைநிற பிளாஸ்டிக் செவ்வகத் தட்டில் மதியச் சாப்பாட்டை ஏந்திக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்குச் சுமப்பது பிடிக்காது. அவள் பார்க்காத போது என்னிடம் விட்டுச்சென்ற பையில்  பணம் வைத்துவிடுவது தான் திட்டமாக இருந்தது. அவள் பார்வை அகலமாக இருந்தது. அந்த அலட்சியப் பார்வையை ரசித்தேன். ஏனென்றே தெரியாமல் உள்ளுக்குள் “காது ஷார்ப்” என்று கேட்டது. பணத்தை திணித்திருந்தேன். அவள் ஒரு சுயம்! கருப்பு வெள்ளையில் டீ.வி பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், ஒளியின் அளவைக்குறைத்து பாட்டி வீட்டீல் மங்கிய ஒளி வெளிச்சத்தில் பேஷன் டீவியில் பார்த்த அதே ஒய்யார நடை. புருவத்தைக் குறுக்கி, கொஞ்சமே கொஞ்சம் தாடை உயர்த்தி என்ன என்றாள். ஃபுட் கோர்ட் நிறைந்து கொண்டிருந்தது. விரலுயர்த்திச் சாப்பிடுவதை விரும்பாதவள். சாப்பிடும்போது பேசினாலும், தலைதூக்க மாட்டாள். பையை கவனிக்க மாட்டாள் என்பது கூட அந்த நம்பிக்கையில் தான். அவளின் வங்கிக் கணக்கைக் கேட்டேன். “எதுக்கு” என்றாள். ஹெட்போன் வாங்கிக் கொடுத்ததுக்கு “தேங்க்ஸ்” என்றேன். அதோடு நிறுத்திக்க போதும் என்றாள். கூடவே “அப்புறம் எதுக்கு அக்கவுண்ட் நம்பர்” என்ற கேள்வியும். “Formalities, courtsey இதெல்லாம் சொந்தத்துக்குத்தான் இங்க இல்ல”. துளசி கைகழுவச் செல்லும்போது பணத்தை எடுத்துவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். “Any repeat mode” என்றாள் நல்லவேளை சாப்பிட்டு முடித்திருந்தேன்.

“முன் முடிவோட உன்ன டெஸ்ட் பண்ணி, அதுவும் அப்படியே நடந்துருச்சின்னா மனசு அடிச்சிக்கும். நடக்கலானா இன்னும் தீவிரமாகும். இது ஒருவகைல பலி கொடுத்தல் நகுலா.” 

இருவரும் ஒன்றாய் மேலே வந்து அவளுடைய wing-ற்குள் நுழையவும், பையில் பணம் வைத்திருப்பதை வாட்சப்பில் செய்தியாய் அனுப்பினேன். பாட்டுக்கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பவள் என்பதால், அலுவலகத்தில் இருக்கும்போது ஆன்லைனில் இருக்கமாட்டாளாம்; அணைத்து வைத்துவிடுவாளாம். இரவு சண்டையின்போது தான் தெரியும். “புத்திசாலித்தனமா நடந்துக்றதா நெனைப்பா?” அவள் கிளம்புகிற நேரம் பார்க்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தாள், பதிலில்லை. ஆறரைக்கு மெல் வேலை செய்யும் மொத்த மனநிலையும் துண்டிக்கப் பட்டிருந்தது. பார்த்துப் பார்த்து முனகல்கள் நிறைந்த, அதுவும் செயற்கைத் தன்மை குறைவாய் உள்ள, அரை மணி நேரம் தாண்டாத, இப்படியாக சேகரித்த பார்ன் மூவி ஒன்றைய ப்ளே செய்து மொபைலை டேபிளில் கவிழ்த்து வைத்துவிட்டு, ஹெட்போன் மாட்டியிருந்தேன். எந்த சஞ்சலனமும் இல்லை. ப்ராஜெக் இல்லாமல் பெஞ்சில் இருப்பவன் மவுசை ஸ்க்ரோல் செய்து கொண்டிருப்பவன் போல, உருட்டிக் கொண்டிருந்தேன். கோடிங் எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடலைத் தடுக்கும் மனம் என்னவாக இருக்கும்?. டீயை உறிஞ்ச உறிஞ்ச பேசத் தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எல்லாமும் ஞாபகத்தில் வந்தன. ரோலர் இருக்கையின் கால்களில், காலை வைத்துக்கொண்டு இடவலம் ஆட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரம் பெர்மிசன் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பி விடலாமா என்றும் தோன்றியது. சிகரெட் நெடியின் தொந்தரவு. லிப்டில் “6”-ஐ அழுத்தியிருந்தேன். மூன்றாவது மாடியை சிகப்பு நிறத்தில் காட்டும்போது நான்கை அழுத்தி, இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

அலுவலகம் முடிந்து கிளம்பியதும் கிளம்பிவிட்டேன் என்று சொல்லத் தோன்றியது. Cab கிளம்பியதும், அறைக்கு வந்துகொண்டிருப்பதைச் சொன்னேன். டைப் பண்ணும் அளவிற்கு பொறுமை இல்லை என்று அனுப்பினாள். உரிமையாய் சண்டையெல்லாம் போடுகிறாள் என்று மனம் குதூகலித்தது. லைனிலேயே இருப்பாள் என்று துளசியின் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்று விட்டாள். அவள் சாதரணமாய் தான் பேசிப் பழகுகிறாள் என்று மீண்டும் எண்ணத் தொடங்கினேன். முப்பது நொடிக்கொருமுறை அவள் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு அறைக்குள் நுழையும் நேரத்தை சொல்லியிருந்தேன். ஆன்லைன் வந்திருந்தாள். “கால் பண்ணவா?” என்றேன். “பண்ணனும்னா எனக்குப் பண்ணத் தெரியாதா என்றாள். பொரிந்து தள்ளுவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் டைபிங்க்கில் இருக்கும்போது மனம் கூடவே பேசிக் கொண்டிருந்தது. எந்த யூகத்திற்குள்ளும் அடங்கவில்லை. ஒரு கேள்வியோடு நிறுத்திவிட்டு “குட் நைட்” என்று அனுப்பினாள். ப்யித்துவிடலாம் என்று தோன்றியதைத் தவிர்த்து, இடது கையால் தலைமுடியை கோதிக்கொண்டே நானும் குட் நைட் சொல்லிவிட்டு ஸ்மைலிக்காக காத்திருந்தேன்.

என்கூட டிராவல் பண்ணுவனு தோணுது. அவ்ளோ சீக்கிரம் கோபமான குரலோ, முகமோ உனக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்றேன். Hmmm Yaa! சரியாத்தான் யோசிச்சிருக்கேன்

எனக்கொரு எல்கை வகுத்து அவளாக என்னை நிறுத்தினால் மட்டுமே நான் தப்பிக்க முடியும். எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. இப்படியே நட்பென்று நீட்டித்து ஒருநாள், அவளின் திருமண அழைப்பிதழை நீட்டினாலும் சரி, இல்லை இதுவே காதலாக மாறினாலும் சரி, அவள் பிடியில் விட்டுவிட்டு இருப்பதே எனக்கு சரி என்று பட்டது. மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டேன். வெகுநேரம் கண்ணாடி பார்த்துக் கொண்டிருந்தேன். அக்குளின் கை வைத்துப் பார்த்தேன். மல்லாந்து படுத்திருந்தேன். ஒருவேளை ஆன்லைன் வந்திருப்பாளா என்று பார்த்தேன். குட்நைட் சொன்ன நேரத்தில் தான் இருந்தது. எனக்கு அவளை நகர்த்தத் தெரியாது என்று நம்பினேன். அணைத்திருந்த விளக்கை திரும்பவும் எரியவிட்டேன். அறையின் எல்லா மூலைகளிலும் ஒட்டடை. இரு பாதங்களையும் ஒட்டிப் பிடித்து அமர்ந்திருந்தேன். சில்லிட்டிருந்தது. தொடையிடுக்கில் வலி எடுக்கவும் சம்மணமிட்டு படுத்துக்கொண்டேன். வாட்சப்பில் அவள் புகைப்படம் இல்லை. எனக்கு அவள் முகம் மறந்திருந்தது. அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நினைவிற்குத் திருப்பதல் போன்ற பிரம்மை. ஸ்பைனல் கார்ட் லேசாக வலித்தது. முட்டியை மடக்கி இடையை உயர்த்தி மூச்சை இழுத்து மெதுவாய் விட்டுக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் கேட்ட நீலப்படம் ஞாபகம் வந்தது.

என்னைத் தயார்படுத்தி தோற்றிருந்தேன். “your eyes are so dry” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவளுடைய அலைபேசி எண்ணை பேஸ்புக் செர்ச் பாக்ஸில் போட்டுப் பார்த்தேன். அவள் ஐடி கிடைக்கவில்லை. அவள் உரிமையாய் பேசியதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற குழப்பம் தூங்கவிடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. என் பதினாறுகளின் முகங்களை நினைவு கூர்ந்துப் பார்த்தேன். மனம் ஒட்டாமல் எரிச்சலுற்றிருந்தேன். விளக்கை அணைத்துவிட்டு போர்வையை மடித்துப் போட்டு அதில் மண்டியின்று அன்னாந்துப் பார்த்து நின்றேன். பருவம் எட்டிய என் பதினான்கு வருட வாழ்வில் தூக்கம் வராமல் நிகழ்த்திய முதல் சுயமைதுனம் அது.

 காதல் வென்றிருந்தது.

 
– (தொடரும்)
ரமேஷ் ரக்சன்
talk2rr@yahoo.com

துளசியின் டைரி

நாக்குட்டி -2

துளசியின் டைரி

இது முழுக்க முழுக்க என்னோட சுயநலம். எனக்குத் தேவைங்றத உங்கிட்ட இருந்து எடுத்து திருப்தி அடைஞ்சிக்கிற ஒரு கொடூர புத்தி. இது ஒரு வித போதை இல்லைன்னா பசி. எனக்கு ஏத்த மாதிரி உன்ன டிசைன் பண்றது இல்லனா உனக்கு ஏத்த மாதிரி என்ன நான் ரெடி பண்ணிக்கிறது. இதுல எது எப்படி நடந்திட்டு இருக்குன்னு என்னால சொல்ல முடியல. எனக்கு அப்படித்தான் தோணுது.

ஆனா இதெல்லாம் செய்யக் கூடாதுனு நெனைக்கிறேன். ஆனா தோற்கிறேன். எனக்கு இது பிடிச்சிருக்கானு கேட்டா பிடிச்சிருக்கு. ஆனா இத செய்றமேன்னு எனக்கு கோவம் வந்திருக்கு.

என்னோட நகத்த வச்சி நக இடுக்கில் தசையை அழுத்திப் பார்க்கிறேன். வலிக்கும் அளவுக்கு என்னால அழுத்த முடியல. எனக்கு என்னலாமோ ஞாபகம் வருது. பள்ளிக்கூட மரத்தடியில், டியூசன் படித்த வீட்டு முற்றத்தில், விடுதி வராண்டாவில், இருந்து எழுதியது எல்லாமே தரைல தான். மேசை இருந்தாலும் என்னால எழுத முடியாது. தரையின் மீதான இந்த ஒட்டுதல் தான் என் மனதை, பாரத்தை நான் இழுக்கும் இழுப்பிற்கு கொண்டு செல்ல அல்லது எழுதிச் செல்ல முடியுதுன்னு நெனைக்கிறேன்.       

என்னால முடியல

இப்டி இல்லாம இருக்க நெனைக்கிறேன் அதுவும் முடியல. சரி உன்னவிட்டு போயிடலாம்னு நெனைக்கிறேன் அதுவும் முடியல. சரி உங்கிட்ட வந்துடலாம்னு நெனைக்கிறேன் அதுவும் முடியல.

பார்க்றது, பேசுறது, பழகுறது, லவ் சொல்றது, அப்றம் கல்யாணம், இந்த மீல்ஸ் சிஸ்டம் என்னால ஏத்துக்க முடியல.

ஆமா இது தான் என் பிரச்சனை.  இத பிரச்சனைன்னு மட்டும் சொல்லிட முடியல. இது ஒரு வகைல Nature தானே. எனக்கு இது தப்பா தோனல. இதெல்லாம் பேசிப் புரியவைக்கக் கூடிய மனநிலை அத அக்செப்ட் பண்ணிக்ற பக்குவம் கண்டிப்பா உனக்கு கிடைச்சிருக்காது. I Know It.  என்னெப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுன்னு சொல்றது எல்லாம் முட்டாள் தனம்னு நேனைக்றேன்.

அக்செப்ட் பண்ணிக்றதும், புரிஞ்சிக்றதும் ஒன்னா?  

உங்கிட்ட லவ் ஓக்கேன்னு  சொல்லும்போது நான் எல்லாத்துக்கும் ரெடியா இருப்பேன். அப்படி இல்லனா உன்ன, உனக்கு உறுத்தல் இல்லாம ரெடி பண்ணிட்டு சொல்வேன். இது பயம்லாம் இல்ல. ஆனா என்னால கொஞ்சம் கொஞ்சமா நெருங்கவோ எதுவுமோ பண்ணமுடியாது. 

எனக்கு எல்லாமே ஒரே நேரத்துல வேணும். எனக்கு அப்படித்தான் இருக்கு? நான் என்ன செய்ய? இப்ப கூட கைலாம் நடுங்குது. இது பயத்துனால வர நடுக்கம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். நிதானமா இருக்கேன். நிதானமா இருன்னு நானே அடிக்கடி மனசுக்குள்ள சொல்லவும் செஞ்சிருக்கேன். ஆனா இப்போ நிதானமா தான் இருக்கேன். இந்த நடுக்கம் என்ன தெரியுமா நீ பக்கத்துல இல்லைங்கற நடுக்கம். வேணுங்கிற போது, வேணும்ங்ற மாதிரி இல்லைங்கற நடுக்கம். கைக்குள்ள தேடும்போது கிடைக்காம அடையிற ஒருவித எரிச்சல் இல்லனா அழுகை. 

இதெல்லாம் உங்கிட்ட சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஏன்னா எனக்கு மொதல்லயே அப்படித் தான். ஆமா மொதல்லயே கொஞ்ச நாள்ளயே. அப்டித்தான் ஸ்டார்ட் ஆச்சிது. இதுக்கு உன்னையோ என்னையோ குறை சொல்ல விரும்பல. நீ ஆசைப்படுற மாதிரி தான் நானும். உன்மேல இல்ல என்மேல எனக்கு பயம் இருக்கு. எனக்கு அந்த உரிமையும் இருக்குனு நம்புறேன். அதான் இப்டி செய்றேன்.

என்னால நான் எப்டின்னு இப்போதைக்கு ஜஸ்ட் செக்ஸ்ல மட்டும் தான் என்னோட லவ்வ சொல்ல முடியும்னு நெனைக்கிறேன். காதல்ல தன்ன மறக்றது காமத்துல தான்னு நம்புறேன். உடல் வழியா கண்டடையும் மெய்; எனக்கு அப்படித்தான் இருக்கு. நினைச்சி பாக்றதுக்கும், நினைவுக்குமான இடைவெளில தான் இந்தக் காதல் முள்வேலியா படர்ந்து கிடக்றதா தோணுது. 

அதனால தான் தப்ப முடியாதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன். ஆனா இதோட லென்த் என்னங்குறதுல டவுட் இருந்துட்டே இருக்கு இது தான் எனக்கு பிரச்சனை. எனக்கு உன்ன பிடிக்கல அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. எப்படி பிடிச்சிருக்குன்னு ஒன்னு இருக்குல்ல. கொஞ்சம் நியாயமா இருக்க விரும்புறேன். உங்கிட்டேயும் சரி எனக்கு நானே அப்டினாலும் சரி. நான் இதுக்கு சமரசம் செய்றதா இல்ல. 

நம்பிக்கையிருக்கு. நீ அவ்ளோ சீக்கிரம் எந்த முடிவுக்கும் வர மாட்டனு என் மனசு சொல்லிட்டே இருக்கு. ஆமா நீ என்ன தொரத்திட்டு தான் இருப்ப அப்டினு இருக்கு. அது கூட நான் உங்கிட்ட இப்டி நடந்துக்கிறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். ஒருவேளை விட்டா நீ போயிடுவ அப்டிங்ற நிலை இருந்துருந்தா நான் வேற மாதிரி யோசிச்சிருப்பேனோ என்னவோ. சொல்லத்தெரியல. 

you know one thing..
am safe now. 

இப்படி தோண ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சி. நீ கட்டாயப்படுத்தல ஆனா இதெல்லாம் எனக்கு நானே புகுந்து பாக்குறேன். 

நீ சொல்வியே ரகசியமாய் ரகசியமாய் பாட்ல ஜோதிகா சிரிச்சிட்டே ரோட்ல நடந்து போற மாதிரி நீ எங்கையோ நடந்து போற மாதிரி பாக்றேன்னு… இது மாதிரி உனக்கும் எனக்கும் பொதுவா சொல்ல எவ்வளவோ இருக்கு.

உன்னால என்ன மட்டும் பாக்க முடியுது. ஆனா என்னால உன்ன மட்டும் பாக்க முடியல. கூட நானும் இருக்கேன். ஆமா அந்த கனவு நெஜமாகி அதுல நான் இருக்க விரும்புறேன். எங்க அப்பாவ பத்தி யோசிக்கவோ, சின்ன சின்ன விசயங்கள நினச்சி பாக்கவோ பெருசா என் லைப்ல ஒன்னும் நடந்துடல. பின்னால உங்கிட்ட இந்த உண்மையெல்லாம் சொல்வேன். அதுனால எனக்கு ஆண்கள், காதல் இப்படி எந்த அபிப்ராயமும் எந்த காலத்துலையும் வந்ததில்லை. 

உங்கிட்ட வந்திருக்கு அத தக்க வைக்கனும்னு நெனைக்கிறேன். எனக்கு இது தப்பா தெரியல. ஒரு லிமிட்க்கு மேல என்ன உங்கிட்ட ஓபன் பண்ண முடியல. முடியவும் முடியாது. நீ உன்னோட கிராமம் நீ பார்த்து வளந்த பொண்ணுங்க, இதெல்லாம் வச்சி என்னோட தாட்ஸ் எல்லாம் மொத்தமா இறக்கினா நீ தாங்குறவன் இல்ல நகுல். எனக்கு அழப்பிடிக்காது. ஆனா நீ தவிக்கிறது பிடிச்சிருக்கு அதுனாலயான்னு தெரியல. ஆனா அழுறேன். 

என்ன ஒட்டு மொத்தமா சுமக்குறவனா நீ இருக்கனும். this is not dependent. ஆனா எனக்கு இந்த shadow பிடிச்சிருக்கு.  நான் அத முழுக்க முழுக்க அனுபவிக்க விரும்புறேன். அதனால காத்துட்டு இருக்கேன். உன்னையும் காக்க வைக்கிறேன். உனக்கு இதெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமா தருவேன். எனக்கு நம்பிக்கை என்மேல இருக்கு. 

நான் என்ன  சில சமயம் travel guide மாதிரி இருக்கேனு நெனச்சிருக்கேன். நெறய புக்ஸ் படிக்கிறதால கூட இருக்கலாம். நான் என்ன குழப்பிக்கிறேன். ஆனா உங்கிட்ட சரியா தான் வந்துட்டு இருக்கேன். இந்த குழப்பம் உன்னையும் டார்ச்சர் பண்ணக்கூடாதுனு பாத்துக்க விரும்புறேன். ஆமா இது தான் நான். 

என்னால எழுத முடியல என்னோட fingers எல்லாம் வலிக்குது. நேத்து நைட் இப்டி உக்காந்து அழுவேனு எதிர் பாக்கல. உன்னவிட நான் தான் பலவீனமா இருக்கேனு நேத்து நைட் எனக்கு காட்டிட்ட thanks for that. ஏன் எதுக்குனு நீ கேள்வி கேட்டிருந்தா நான் இவ்ளோ தூரம் வந்துருக்க மாட்டேனு நெனைக்கிறேன் நகுல். 

ஒன்னு உன்னவிட்டு போயிருப்பேன். இல்லனா accept பண்ணிருப்பேன். என்ன இந்த ரெண்டுக்கும் நடுவுல நிக்க வச்சி வேடிக்கை பாக்ற நீ. ஆமா டா. நீ இவ்ளோ அமைதியா எனக்கு ஏத்த மாதிரி நடந்துக்குறத என்னால தாங்க முடியல. நான் இந்த ஸ்டேஜ்க்கு வர first reason இதான்.  இல்லனா எத்தனையோ பசங்க மாதிரி நீயும் போயிருப்ப. 

Yes உன் மேல தான் தப்பு. 

உதடு நடுங்குது எப்படி, எதுக்குன்னு எனக்குத் தெரியல. கண்ணாடியை பார்க்கிறேன் எனக்கு சித்திரவதை செஞ்சிக்கனும் போல இருக்கு. என்னை அறியாமலே கதவு சத்தியிருக்கானு பார்க்கிறேன். சட்டுனு பேனாவ கீழ விட்டுட்டேன். பயம்னு எல்லாம் இத ஒத்துக்க நான் தயாரா இல்ல. எனக்கு காயங்கள் வேணும் அது உங்கிட்ட இருந்து. அத நான் எஞ்சாய் பண்ணனும். எப்பவுமே! ஆமா எப்பவுமே உன்ன விட்டுக்கொடுக்க முடியாது தான். எனக்கு உன்னவிட நான் முக்கியம்.

– (தொடரும்)

ரமேஷ் ரக்சன்

talk2rr@yahoo.com