Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

செம்மொழிப் பூங்கா போயிருந்தோம். பச்சையாய் வைத்திருந்தார் கலைஞர். கலைஞர் பச்சையாய் வைத்தால் காயவிடுவதுதானே அம்மாவின் வழக்கம். பூஞ்சோலையில் இப்போது சுடுகாட்டின் மணம். அவரின் அடையாளங்களை ஒன்றுவிடாமல் சிதைத்தழித்திருக்கிறார்கள். இப்படியொரு மக்களை நினையாத அரசால் மக்களின் சின்ன சின்னச் சந்தோஷங்கள்கூட பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பழிவாங்குதல் ஒன்றே இவர்களின் தலையாய கொள்கையாய் இருக்கின்றது.நீரே பார்க்காதிருக்கும் பச்சைப்புல்வெளியில் சூரியன் நிரம்பித் ததும்பி புற்களின் கருகும் ஓசையைக் கேட்க முடிந்தது. நானும் கரிகாலனும் உள்ளே நுழைந்தோம். நுழைவுக்கட்டணம் வாகனங்களுக்கான வாடகை யாவற்றையும் கூட் டிவிட்டார்கள். …
Read more

அமெரிக்க கனவு  – பாலசுப்ரமணியன். Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி  இல்லை.இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு 2. Wikileaksல் வெளியான அமெரிக்க …
Read more

அந்தப் பலகை விரிப்புகளின் மீது நடந்து நடந்து கால்களுக்குள் ஒரே குடைச்சல். புத்தகங்களைச் சாலையோர கற்கள் போல ஒரே இடத்தில் குவித்துப்போட்டிருக்கிறார்கள். சத்தங்களாலான பெரும் பரப்பில் பார்க்கவே பார்க்காத முகங்களிடையில் பார்த்த முகங்கள் சிலவற்றையும் பார்த்தேன். பார்க்கக்கூடாத முகங்களையும் பார்த்துத் திருப்பிக்கொண்டு போனேன். ஒரு சில பழைய முகங்களைப் பார்க்கவேண்டும்போலிருந்தாலும் இதயம் ஏனோ பார்க்காதே என்று சொல்லிவிட்டது. உடற்பயிற்சி கல்லூரியின் மாபெரும் பொட்டலில் கொட்டகைகளைப்போட்டு சதுரசதுரமாய் 10க்கு 12 என்ற அளவில் புத்தகக்கடைகளை உருவாக்கி ஒரு பத்துநாள் …
Read more

Powered By Indic IME