யவனிகா ஸ்ரீராம் கவிதை

0

கலைந்த தலை

டெர்மினல்களில் இரவு நிற்கிறது
மரக்கூட்டங்களிடையே வெளிர்ந்து
மினுக்கும் நட்சத்திரங்கள்
கட்டண கார் ஷெட் பகுதியில் அழுகுரல்
பலகணியில் என் கலைந்த தலை
உடல் நடுங்குகிறது
அங்கு நான் எதையும் காணவில்லை
சொல்ல மாட்டேன் அவசியமற்றது
உண்மையில் பார்த்தேன் அக்காட்சியை
இட்சிப் பழங்கள் சிதைந்த துர்நாற்றம்
மசகெண்ணையின் மூக்கரிபபு
சாலைகளின் கடும் இறுக்கம்
மரங்களில் ஏனோ பறவைகள் நிதானம் இழக்கின்றன
விதைகளின் உறைக்குள் போய்த்
திரும்ப உறங்குவேன் போலும்
இக்காலங்களுக்கு ஏற்ற ஒரு
நாசகாரன்
டெர்மினல்களில் கடும் குளிர் சீறுகிறது
ஓ மகிழ்ச்சியான காட்சி
பல்லாயிரம் முதியவர்கள் தேங்கி இருந்தமைக்காக
வெட்கித் தலை குனிந்தபடி
இந்நகரைக் அமைதியாய்க் கடந்து
போய்க்கொண்டிருக்கிறார்கள்.

Disheveled Hair

Night stands in terminals
The stars twinkle dimly amidst trees
Near the pay car shed there was a cry
In the balcony my disheveled hair
My body shivers
I didn’t see anything there
I won’t say … it’s not necessary
In fact I saw it
That scene
The fowl rotten smell of ‘ itchy ‘ fruits
The itching of the nose due to grease
In highways there was severe coarctation
In trees somehow birds lose their patience
I would go back into the husk of a seed and
sleep I think
A destroyer suitable for these times
In terminals cold hisses
O a very happy scene
For having lived for long thousands of
old people go out of this city bowing
their heads in shame

(translated by Shanmugam Kaniyamuthu)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here