அல்லிராணி

பிரமிளா பிரதீபன் 01 நமுனுகுல மலைத்தொடர்ச்சியின் அகண்டவெளிப் பள்ளத்தாக்கிற்குள் இருந்த அந்தத் தோட்டத்தை அல்லிராணி மிக விரும்பினாள். உலகில் வேறெதையுமே அறியாத தனிமையில் அவளும் உரத்தொலிக்கும் அவள் வீட்டு வானொலி பாடல்களுமென குறுகியதொரு வட்டத்திற்குள் அவள் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தாள். அல்லிராணிக்கு காதுகள் இரண்டும் அவ்வளவாகக் கேட்பதில்லை. எனினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து மொத்த லயமும் அதிரும் அளவிற்கு வானொலியை ஒலிக்க விடுவாள். அதன் பேரிரைச்சலானது இடதுப்புற தொரையான் வீட்டுக்கும் வலப்பக்கத்து ரத்தினம் வீட்டுக்கும் நீண்டகாலப் … Continue reading அல்லிராணி